Tuesday, June 1, 2010

அபத்த கவிதை - 3

சாளரத்தின் வழியே
சூரியனின் ஒளிக்கரங்கள்
நீள்கின்றன
கழுவப்படாத தேநீர் கோப்பையை
எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன.
படுக்கை விரிப்பு கலைந்து கிடக்கிறது.
வாசிக்கப் படாத புத்தகங்கள்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன
இவற்றைப் பற்றிய
பிரக்ஞய் இல்லாமல்
மின் விசிறியில் தொங்கிக்கொண்டிருக்கிறது
என் உடல்.

1 comment:

  1. அழகாய் படம்பிடிக்குது உன் கவிதை யதார்தத்தை...அழகு.

    ReplyDelete