இரவின் மடியில்
தவழும் என் தனிமை
உருகும் மெழுகில்
உதிரும் என் கண்ணீர்
ஒரு கணத்தின் முறிவில்
பிறக்கும் கவிதையில்
நிறையும் என் ஆன்மா
கருகும் பூவிதழுக்கும்
கடைசி உயிர்ப்புக்கும்
உள்ள இடைவெளி
என் ஆயுள்
ஆதலால்
என் தேடல் அவசியமானது
இந்த வாழ்க்கை அவசியமற்றது .
நிறுத்தி வாசிக்க வைத்தது உன் கவிதை...நன்று.
ReplyDelete