Thursday, June 10, 2010

தேடல் அவசியமானது வாழ்க்கை அவசியமற்றது

இரவின் மடியில்
தவழும் என் தனிமை
உருகும் மெழுகில்
உதிரும் என் கண்ணீர்
ஒரு கணத்தின் முறிவில்
பிறக்கும் கவிதையில்
நிறையும் என் ஆன்மா
கருகும் பூவிதழுக்கும்
கடைசி உயிர்ப்புக்கும்
உள்ள இடைவெளி
என் ஆயுள்
ஆதலால்
என் தேடல் அவசியமானது
இந்த வாழ்க்கை அவசியமற்றது .

1 comment:

  1. நிறுத்தி வாசிக்க வைத்தது உன் கவிதை...நன்று.

    ReplyDelete