Tuesday, June 15, 2010

மழையின் வழியே இரவு பெய்து கொண்டிருந்தது

மழையின் வழியே
இரவு பெய்து கொண்டிருந்த
அந்த விசித்திர நாளில்தான்
நம் முதல் சந்திப்பு நிகழ்ந்தது

அந்த இரவின்
சில துளிகளை
என் வீட்டு மீன் தொட்டியில்
சேமித்து வைத்திருக்கிறேன்
நம் அடுத்த சந்திப்பின் போது
உனக்கு பரிசளிப்பதற்காக

அதற்கு முன்
நீ
இரவை பார்த்து
பயப்படுவதை நிறுத்தி விடு
பகலை விடவும்
இரவு கருணை மிக்கது
நமக்கு நாம் சொந்தமாகும் ஓர் இரவில்
உன்னிடம் சொல்வதற்கென்று
என்னிடம் ஒரு ரகசியமுண்டு

முன்பொரு சமயம்
கடவுளின் அதிகாரத்திற்கு
கட்டுப்பட மறுத்த
அந்த தேவதூதன் நான்தான் .

1 comment:

  1. நண்பா கவிதை அருமை, மெல்லிய சர்ரியலிச வாசனையுடன்.
    தங்களுக்கு நேரமிருப்பின் என் வலைப்பூவிற்கு வருகை தாருங்கள்.

    ReplyDelete