Saturday, July 22, 2017

நான் ஒரு குடிகாரன்
நான் ஒரு சூதாடி
நான் ஒரு பெண்பித்தன்
நான் ஒரு கொலைகாரன்
நான் ஒரு கொடுங்கனவு
நான் ஓர் ஆணாதிக்கவாதி
நான் ஒரு முதலாலித்துவ வெறியன்
நான் ஒரு மூடநம்பிக்கையாளன்
நான் ஒரு நம்பிக்கை துரோகி
நான் ஒரு பைத்தியக்காரன்
நிற்க,
நான் ஓசிக் குடிகாரனில்லை
நான் அடுத்தவன் பணத்தை பந்தையம் வைப்பவனில்லை
நான் விருப்பமில்லாத பெண்ணை தொடுபவனில்லை
நான் சந்தர்ப்பவாதி இல்லை
நான் குழந்தைகளின் உறக்கத்தில் பிரவேசிப்பதில்லை
நான் புரிதலற்ற பெண்ணியவாதி இல்லை
நான் ஆர்வக்கோளாரு புரட்சியாளன் இல்லை
நான் அரைகுறை பகுத்தறிவுவாதி இல்லை
நான் பொய் நம்பிக்கைகளை விதைப்பவன் இல்லை குறிப்பாக, நான் போலியானவன் இல்லை ஆகவே, நான் கலைஞன்.

No comments:

Post a Comment

Older Post Home